இதையடுத்து தற்போது சுபாஷ் நகர் ரயில்வே மேம்பாலம் பணி நடைபெற்று வருகிறது. அப்பணியினை தளவாய்சுந்தரம் எம் எல் ஏ நேரில் சென்று நேற்று பார்வையிட்டார்.
உடன் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவரும் தோவாளை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பாலம் பணி கடந்த 5 ஆண்டுகளாக தாமதமாகி வருவதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளதால் உடனடி பணிகளை முடிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.