கடையால் பேரூராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

கடையால் பேரூராட்சி பகுதிகளில் 22 பழங்குடியினருக்கு தலா ரூ. 5,73,000 வீதம் ரூ. 1.26 கோடி மதிப்பில் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், மோதிரமலை பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 45 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று (23-ம் தேதி) பார்வையிட்டார். கடையால் பேரூராட்சி செயல் அலுவலர் ஜோஸ்லின் ராஜ், இளநிலை பொறியாளர் பாரத்ராஜ் மற்றும் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி