குமரி மாவட்டம் அருமனை பகுதியில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரி பொதுமக்கள் நேற்று (மே 29) போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் கடையை மூடுவதாக அறிவித்த நிலையில், 13 நாட்களுக்குப் பிறகு நேற்று (மே 29) மீண்டும் கடை திறக்கப்பட்டதால் அனைத்து கட்சியினரும் திரண்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். டாஸ்மாக் உயர் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் மக்கள் போராட்டம் தொடர்கிறது.