இது குறித்த புகாரின் பேரில் போலீசார் மதுக்குமாரை கைது செய்தனர். ஜாமீனில் வந்த மதுக்குமாருக்கும் தன்யாவுக்கும் மீண்டும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அனிகுட்டன் மனைவியை கம்பியால் சரமாரியாக தாக்கினார். மனைவி இறந்துவிட்டார் என்று எண்ணி அனிகுட்டன் வீட்டில் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தன்யா கேரள மாநில மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆறுகாணி போலீசார் வழக்குப் பதிவு செய்து நேற்று இரவு மதுக்குமாரை கைது செய்தனர். இதை அடுத்து அவரை இன்று 13-ம் தேதி குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து மதுக்குமாரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.