இன்று (ஏப்ரல் 15)அந்த பகுதிக்கு வந்தவர்கள் மரம் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
மாங்கோடு ஊராட்சியில் தொடர்ந்து பழமையான மற்றும் பாதுகாக்கப்பட்ட மரங்கள் வெட்டிக் கடத்தப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை மற்றும் போலீசார் மரங்கள் வெட்டிக் கடத்தும் கும்பலை கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.