கன்னியாகுமரி மாவட்டம் மணிகட்டி பொட்டலை சேர்ந்தவர் ராதா மகன் சுபின். இவரது மனைவி ஆஷிகாவுக்கு குழந்தை பிறந்ததால் தாயார் வீட்டிற்கு செல்வதாக கூறவே, அவரை சுபின் அனுப்பவில்லை. இதனால் அவர் அதிக மாத்திரை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கார்த்திக் உட்பட 2 பேர் ராதா வீட்டில் புகுந்து குழந்தையை கேட்டு ராதாவை தாக்கியுள்ளனர். இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்துள்ளனர்.