கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்தரம் பல்பநாபன்புதூர் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 54), சிற்பக் கலைஞர். சம்பவத்தன்று இவர் நாகர்கோவில் பள்ளவிளை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பள்ளவிளையை சேர்ந்த பிரகாஷ்(28), பெருவிளையை சேர்ந்த நிஷாந்த்(31) ஆகிய 2 பேரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி வேலுவிடம் இருந்த ரூ. 200-ஐ பறித்தனர். இது குறித்த வேலு கொடுத்த புகாரின்பேரில் பிரகாஷ் உள்பட 2 பேரை ஆசாரிபள்ளம் போலீசார் கைது செய்தனர்.