நாகர்கோவிலில் வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது.

நாகர்கோவிலில் கார் டிராவல்ஸ் நடத்தி வரும் மதன்ராஜாவிடம் (31) மதுபானம் வாங்க பணம் கேட்ட இருவர் தர மறுத்ததால் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த மதன்ராஜா ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், ஆசாரிபள்ளம் போலீசார் அபினேஷ் (23) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி