கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ராஜாக்கமங்கலம் துறை கடற்கரை கிராமத்தில் பூட் திட்டத்தின் கீழ் மீன்பிடித் துறைமுகம் அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், கோவளம் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.