இதில் காளான் வளர்ப்பு தொழில் நுட்பங்கள் மற்றும் வணிக ரீதியாக உற்பத்தி செய்தல் தொடர்பான தொழில் நுட்பங்களில் சம்பந்தப்பட்ட வல்லுநர்களால் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் காளான் உற்பத்தி கூடத்திற்கு நேரில் அழைத்து சென்று செயல்முறை விளக்கம் மற்றும் களப்பயிற்சி அளிக்கப்பட்டது. கிராமப்புறங்களிலிருந்து ஆர்வமும் ஊக்கமும் உள்ள இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
பயிற்சி முடிவில் பயிலுநர்களுக்கு வேளாண்மை இணை இயக்குநர் ஆல்பர்ட் ராபின்சன் அவர்கள் பயிற்சி சான்றிதழை வழங்கினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் ஜாய்லின் சோபியா, வேளாண்மை அலுவலர் ச. சந்துரு மற்றும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை பணியாளர்கள் செய்திருந்தனர்.