நாகர்கோவில் பார்வதிபுரம் ரயில்வே கேட் அருகே இயங்கி வரும் மதுபான கடைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான குடியிருப்புகள் உள்ள பகுதியில் இந்த கடை செயல்படுவதால், மது அருந்த வருபவர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி, கடை வாயிலில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.