வடசேரி, இறச்சகுளம் பகுதிகளில் நாளை மின்தடை

நாகர்கோவில், தடிக்காரன்கோணம், வடசேரி, ஆசாரிபள்ளம், வல்லன் குமாரவிளை ஆகிய உபமின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நாகர்கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும். பெருவிளை, சுங்கான்கடை, கிருஷ்ணன்கோவில், கோர்ட்டு ரோடு, நேசமணி நகர், பார்வதிபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்படும் என நாகர்கோவில் மின் வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி