ஈத்தாமொழி, ராஜாக்கமங்கலம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை.

கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர், மீனாட்சிபுரம், ராஜாக்கமங்கலம் உப மின் நிலையங்களுக்குட்பட்ட மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. 

எனவே அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை தெங்கம்புதூர், பறக்கை ஐ.எஸ்.இ.டி., மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், உசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், முருங்கவிளை, புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, காரவிளை, பருத்திவிளை, வைராகுடியிருப்பு, கணபதிபுரம், தெக்கூர், தெக்குறிச்சி, காக்காதோப்பு, இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், சவேரியார் கோவில் சந்திப்பு, வடிவீஸ்வரம், தளவாய்தெரு, மீனாட்சிபுரம், வேப்பமூடு, பத்தல்விளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது. 

இந்த தகவலை நாகர்கோவில் மின்வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி