கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், சிறியது முதல் பெரிய அளவிலான பொருட்களை பேக்கிங் செய்து (35 கிலோ வரை) பார்சல் தபால் மூலம் பாதுகாப்பாக அனுப்பும் வசதி இந்திய அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. நாகர்கோவில் தக்கலை கன்னியாகுமரி நெய்யூர் குளச்சல் அருமனை மார்த்தாண்டம் குழித்துறை ஆகிய தபால் நிலையங்களில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.