குமரி மாவட்டத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு 281 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 500 பேர் கைது செய்யப்பட்டனர். 155 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், போதைப் பொருட்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, சென்னையில் இருந்து புதிய மோப்ப நாய் விரைவில் குமரி மாவட்டத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.