புனலூரில் இருந்து மதுரைக்கு நேற்று இரவு ரயில் புறப்பட்டு சென்றது. நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் அருகே சிக்னலுக்காக ரயில் நின்றபோது இளைஞர் ஒருவர் ரயிலில் ஏறி அதில் பயணம் செய்த ராஜ்கமல் என்பவரின் பையை எடுத்துக் கொண்டு செல்ல முயன்றபோது அவர் சத்தம் போடவே பயணிகள் அந்த இளைஞரை பிடித்தனர். அவர் கைது செய்யப்பட்டார். சாய் பத்மநாபன்(23) என்ற அந்த இளைஞர் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.