நாகர்கோவில்: நீட் ரத்து செய்ய கோரி தி. க ஆர்பாட்டம்

நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு இன்று (மே. 16) குமரி மாவட்ட தி.க. சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் தொடர்ச்சியான மோசடிகளைக் கண்டித்தும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக மற்றும் மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி