கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் இன்று (மே 16) நாகர்கோவில் வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வாகனங்களில் மருத்துவ உபகரணங்கள், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, அவசர கால வெளியேறும் கதவு போன்ற வசதிகள் சரியாக உள்ளதா என அவர் பரிசோதித்தார்.