கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் சுவரொட்டியை கிழித்ததாக தமிழக வெற்றிக்கழக இளைஞரணி அமைப்பாளர் ராஜன் மீது கோட்டாறு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாகையடி தெருவில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை ராஜன் கிழித்தபோது, திமுக இளைஞரணி அமைப்பாளர் அஜித் தட்டி கேட்டதாகவும், அப்போது ராஜன் அவரை ஆபாசமாக பேசி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அஜித் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.