நாகர்கோவில்: பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி மயக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நேற்று முன்தினம் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் குளச்சல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 குழந்தைகளும் இதில் அடங்குவர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். உணவில் உடலுக்கு ஒவ்வாமை தரக்கூடிய ஏதாவது கலந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி