கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், அனுமதியின்றி இயங்கிய பேக்கரி கடை மீது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பாரதி நடவடிக்கை எடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரியை அவதூறாகப் பேசியதாகக் கூறி, வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அல்காலித், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (ரெட் ஸ்டார்) மாவட்ட செயலாளர் மணவை கண்ணன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் மணவை கண்ணன் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.