தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று (ஏப்ரல் 8) நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது வருகிற 15ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய நாகர்கோவில் வரும் பிரதமர் மோடி, ரோட் ஷோவில் பங்கேற்கிறார் என கூறினார். மேலும், முதல்வர் பாஜகவைக் கண்டு அஞ்சுவதாகவும், அவரது முன்னாள் அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.