கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில், எஸ்பி தலைமையில் போக்குவரத்து காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோடை வெயிலில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து காவலர்களுக்கும் சன்கிளாஸ் மற்றும் கையுறைகளை எஸ்பி வழங்கினார். காவல்துறை அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பணியின் போது காவலர்களின் உடல்நலனைப் பேணும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.