குமரி: அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயங்கிய மினிபஸ் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையிலான போலீசார் நேற்றுமுன்தினம் (ஜூலை 4) கோட்டார் ரெயில் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினிபஸ் நின்று கொண்டிருந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அந்த மினி பஸ் ஆவணங்களை ஆய்வு செய்தனர். 

அப்போது அந்த மினி பஸ் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தை மீறி மாற்று வழித்தடத்தில் இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து மினி பஸ்சை போலீசார் பறிமுதல் செய்து ரூ. 500 அபராதம் விதித்தனர். இதேபோல் வடசேரி பகுதியில் மது போதையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டியதாக 3 வாலிபர்களுக்கு தலா ரூ. 1000 அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி