குமரி தந்தை மார்ஷல் நேசமணி 131-வது பிறந்த நாள் தினத்தினை முன்னிட்டு இன்று (ஜூன் - 12) நாகர்கோவில், வேப்பமூடு பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நேசமணி மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, மாநகராட்சி மேயர் மகேஷ், எம். எல். ஏ கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.