கன்னியாகுமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்.23) வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்ட பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்தம் 15 லட்சத்து 10,550 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 7,51,016 ஆண்கள், 7,59,390 பெண்கள் மற்றும் 144 இதர வாக்காளர்கள் அடங்குவர். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 2,86,968 வாக்காளர்கள் உள்ளனர்.