குமரி: காரை ஏற்றி கொலை.. குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

பணப் பிரச்சனை காரணமாக, பணிக்கன்குடியிருப்பைச் சேர்ந்த ஜெயகுமார் மற்றும் அவரது சகோதரர் விஜயகுமார் மீது விக்டர் ராஜதாஸ் காரை ஏற்றினார். இந்தச் சம்பவத்தில் விஜயகுமார் உயிரிழந்தார். பிப்ரவரி 12 அன்று நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்குப்பதிந்து விக்டர் ராஜதாஸை கைது செய்தனர். விசாரணையில், பணத்தைக் கேட்டு அவமானப்படுத்தியதால் காரை ஏற்றியதாக ராஜதாஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி