இந்நிலையில் கேரள மாநில முதலமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான பிணராயி விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக மதுரை சென்றார். நாகர்கோவில் வந்தடைந்தபோது, தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். போலீசாரின் மரியாதையையும் அளித்த நிலையில் சிறிது நேரம் ஓய்விற்குப் பின் நாகர்கோவிலில் இருந்து கார் மூலம் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார்.