கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (நவம்பர் 21) முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழகத்தை ஒட்டி குமரிக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு நகர்ந்துள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.