நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை நீதிமன்றத்திற்கு இன்று (பிப்-25) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு பிரிவு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது ஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்துவிட்டு சென்றதும் இந்த மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.