நாகர்கோவிலில் வீடு புகுந்து ரூ. 73,500 திருட்டு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புது குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (48) இவரும் இவரது சகோதரர் மோகனும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று அதிகாலை யாரோ சசிகுமார் வீட்டில் புகுந்து வீட்டில் இருந்த ரூ. 73,500 திருடிக் கொண்டு ஓடியதை அவரது அண்ணன் மனைவி பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதுகுறித்து, சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி