நாகர்கோவில் ஒழுங்கினசேரி பகுதியில் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வர ஒரு மணி நேரம் ஆகும் நிலையில், அப்டா மார்க்கெட்டில் இருந்து வடசேரி செல்ல மட்டும் 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த நெரிசலைக் குறைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.