நாகர்கோவிலில் திமுக நிர்வாகிகள் கூட்டம்

குமரி மாவட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகர செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் தலைமை தாங்கிப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: ஓரணியில் தமிழ்நாடு முழுவதும் நிர்வாகிகள் அனைவரும் வீடு வீடாகச் சென்று அதிகப்படியான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். 

தி.மு.க அரசின் மக்கள் நலத்திட்டப் பணிகள் குறித்துப் பொதுமக்களிடம் கூறவேண்டும். அனைவரும் உடனடியாக உறுப்பினர் சேர்க்கைப் பணியைத் தீவிரப்படுத்தி, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி