கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று (பிப். 6) மாவட்ட நீர் விளையாட்டு கழகம் சார்பில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் இப்போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்கள் நீச்சல் திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.