இதில் தீவிபத்துகளை எப்படி தடுப்பது? பேரிடர் காலங்களில் தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது? பிறரை எப்படி மீட்பது? என்பது பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் சுமார் 1, 600 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சியை நாகர்கோவில் உதவி மாவட்ட தீயணைப்பு அதிகாரி துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் செய்து காட்டினர். இந்த நிகழ்ச்சியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் ஆஷிக் குமார் ஜோஷி, முது நிலை ஆசிரியை பியூலா ஜாஸ்மின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: இன்று தீர்ப்பு