நாகர்கோவில் மேயர் தொடங்கி வைத்த வளர்ச்சி பணிகள்.

நாகர்கோவில் மாநகராட்சி 32-வது வார்டுக்குட்பட்ட புனித அன்னம்மாள் சாலையில் ₹15 இலட்சம் மதிப்பீட்டில் தார் தளம் அமைக்கும் பணியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குடியிருப்பு முன்பக்கம் ₹1. 30 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீரோடை பழுது சரி செய்யும் பணியினையும் திமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வழக்கறிஞர் மகேஷ், தொடங்கி வைத்தார்.
உடன் துணை மேயர் மேரி பிரின்சிலதா, மண்டல தலைவர் செல்வகுமார், மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த், ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணை பெருந்தலைவர் வழக்கறிஞர் சரவணன், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி