நாகர்கோவிலில் ரூ. 7.20 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 10-வது வார்டு நெசவாளர் காலனி அரசு தொடக்கப்பள்ளியில் ரூ. 2.20 லட்சத்தில் சீரமைப்பு மற்றும் 11-வது வார்டு பரதர் தெரு மற்றும் புளியடி பகுதியில் உள்ள கழிவறையை ரூ. 5 லட்சத்தில் சீரமைப்பு ஆகிய பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவில் மேயர் மகேஷ் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல தலைவர் அகஸ்டினா கோகில வாணி, ஜவஹர், கவுன்சிலர்கள் வளர்மதி, ஸ்ரீலிஜா, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி