கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் பகுதியில் ஜெபக்கூடம் நடத்தி வரும் மத போதகர் அமல் ராஜன் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் நேற்று நாகர்கோவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து, அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தார்.