கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 25-வது வார்டுக்குட்பட்ட வடிவீஸ்வரம் மீனாட்சி கார்டன் செல்லும் சாலை 2 - வது தெருவில் அழகம்மன் கோவில் கார்டன் பகுதியில் ரூ. 8.15 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி இன்று நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் இந்தப் பணியினைத் தொடங்கி வைத்தார். அவருடன் மாமன்ற உறுப்பினர் அக்ஷய கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.