இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆகியவற்றின் குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு மாநகராட்சி பூங்கா முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து ஆகியோர் தலைமை தாங்கினர்.
கம்யூனிஸ்டு கட்சிகளின் நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. லீமா ரோஸ், அகமது உசேன், சுசீலா, அருள் குமார், அண்ணாதுரை உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். முடிவில் முன்னாள் எம்.பி. பெல்லார்மின் நிறைவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.