நாகர்கோவிலில் அதிமுக பெண் நிர்வாகி மீது வழக்கு

குமரி மாவட்டம் தடிக்காரன்கோணத்தை சேர்ந்தவர் ராணி. இவர் அ. தி. மு. க. மாநில மகளிரணி இணை செயலாளராக உள்ளார். தற்போது நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் சுரேஷ் என்பவரின் வீட்டில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் வாடகைக்கு வசித்து வருகிறார். 

வீட்டின் உரிமையாளர் சுரேஷ் அமெரிக்காவில் உள்ளார். ராணி தரப்பில் ஒப்பந்தம் முடிந்தும் வீட்டை காலி செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. வீட்டை காலி செய்யுமாறு சுரேஷ் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே பிரச்சினை நீடித்து வந்துள்ளது. 

இந்த நிலையில் சுரேஷின் சகோதரர் ராஜேஷ் என்பவர் ராணியிடம் சென்று ஒப்பந்தம் முடிந்துவிட்டதால் வீட்டை காலி செய்யுமாறு கூறியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் ராணி உள்பட 2 பேர் சேர்ந்து ராஜேஷை மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து ராஜேஷ் நேசமணி நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ராணி உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி