கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வடலிவிளையை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30). கார் டிரைவரான இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்தநிலையில் இருந்த விக்னேஷ் தொட்டில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விக்னேஷின் தந்தை ஜெயச்சந்திரன் (58) கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) உமா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தகராறின் காரணமாக கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.