மதுரை அருகே சோழவந்தான் பகுதியில் ரயில்வே யார்டு பணி காலை 11:30 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை வண்டி எண் 16322 கோயம்புத்தூர் சந்திப்பு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில், திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே நிர்வாகம் நேற்று தகவல் தெரிவித்துள்ளது.