ஆடி அமாவாசை குமரிக்கு 28-ந்தேதி உள்ளூர் விடுமுறை.

கன்னியாகுமரி மாவட்டத் திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி தினத்தினை முன்னிட்டு வியாழக்கிழமை (28-ந்தேதி) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தர விடப்படுகிறது. 28-ந்தேதி அன்று உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 13-8-22 (சனி) கன்னியா குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும். 28-ந்தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலை மைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப்பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி