இதை பார்த்ததும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கும் காவல் நிலையத்திற்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். மின்வாரிய ஊழியர்கள் பாதுகாப்பை கருதி உடனடியாக மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்வதை நிறுத்தி உள்ளனர். பின்னர் அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அந்த வாலிபரிடம் கீழே இறங்குமாறு கூறினார்கள். ஆனால் அவர் கேட்க மறுத்து கோபுரத்தின் உச்சிக்கு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு வீரர்கள் அவரை பின்தொடர்ந்து மேலே சென்று அவரது கோரிக்கைகள் என்ன என்பது குறித்து கேட்டு அறிந்து அதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு தரை இறக்கினர். பின்னர் அந்த வாலிபரை போலீசார் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியபோது அவர் அதே பகுதியை சேர்ந்த நாகு என்பது தெரியவந்தது. மேலும் தனது சொத்து பங்கிடுதல் தொடர்பாக உறவினர்கள் இடையூறு செய்வதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.