கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், வீட்டை பூட்டிவிட்டு தாய் வீட்டிற்கு சென்ற நுங்கு வியாபாரி ரத்தினமணியின் வீட்டில் இருந்த 2 கிராம் தங்க கம்மல் மற்றும் ரூ. 7,500 திருடு போனது. இதுகுறித்து வடசேரி போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், ரத்தினமணியின் உறவினரான சஜின்குமார் (30) என்பவர் நகை-பணத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.