நாகர்கோவிலில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

நாகர்கோவில் நேசமணி நகர் போலீசார் நேற்று ஆயுதப்படை மைதானம் செல்லும் சாலையில் ரோந்து சென்றனர். அப் போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். போலீசார் அவரை பிடித்து சோதனையிட்ட போது, அவரிடம் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை போலீ சார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அந்த வாலிபர் புத்தளம் பகுதியை சேர்ந்த ராஜாகுமார் (வயது 35) என்பதும் அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து ராஜாகுமாரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி