நாகர்கோவில் அருகே சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்

நாகர்கோவிலில், தொல்லவிளை பகுதியைச் சேர்ந்த பிரவீன்-பிரதிபா தம்பதியினரின் 10 வயது மகள் பிரமிக்பா, நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர் வீட்டில் வளர்க்கப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் அவரைத் துரத்தி கடித்துள்ளது. சிறுமிக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை நாய் கடித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்தி