நாகர்கோவிலில், 57 வயதான நகை தொழிலாளி மீனாட்சி சுந்தரம், தனது மூத்த மகள் இறந்த மனவேதனையால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி தேவி அளித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2024-ல் அவரது 16 வயது மூத்த மகள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் மனமுடைந்த மீனாட்சி சுந்தரம், வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.