கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று நல்ல பாம்பு புகுந்தது. இதைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் நாகர்கோவில் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டில் இருந்த மிகப்பெரிய நல்ல பாம்பை பத்திரமாகப் பிடித்து சாக்கில் அடைத்தனர். பின்னர், அந்தப் பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்த பிறகு, வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.